--- --:--:-- --

மருத்துவ மாணவர் விவசாய கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு..!

6

ன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே காலையில் எழுந்து தோப்பு பகுதிக்கு சென்ற மருத்துவ மாணவர் விவசாய கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

காலையில் எழுந்து வீட்டின் பின்புறம் உள்ள தோப்பு பகுதிக்கு சென்ற முகிலன்விலை பகுதியை சேர்ந்த மருத்துவ மாணவரான சிவனேஷ் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் தேடி சென்றனர்.

 

அப்போது சுமார் நூறு அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் இருந்த சிவனேஷ் சடலமாக கிடந்துள்ளார். சிவனேசன் சடலத்தை மீட்டு கால் தவறி விழுந்தாரா ? அல்லது கொலையா? தற்கொலையா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon