10, 12 ஆம் வகுப்புக்கு இன்றுமுதல் Mark Sheet வழங்கப்படுகிறது ..!
பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் பெற்றுக்கொள்ளலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் கடந்த 20ஆம் தேதி வெளியானது.
இதையடுத்து பள்ளி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் வழங்கப்படும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது.
10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் இன்று காலை 11 மணி விவரத்தை அறிந்து www.tn.dge.nic.in இணைய தள பக்கத்தில் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






