மெரினா நீச்சல் குளம் பராமரிப்பு பணி நிறைவு : நாளை திறப்பு
சென்னை மெரினா நீச்சல் குளத்தின் பராமரிப்புப் பணிகள் முடிந்ததை அடுத்து பொது மக்கள் பயன்பாட்டுக்காக நாளை மீண்டும் திறக்கப்படுகிறது. நீச்சல் குளத்தில் தண்ணீர் சுத்திகரிப்பு, நடைபாதை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ரூ.2.50 கோடி மதிப்பில் செய்யப்பட்டன.
திங்கட்கிழமை தவிர்த்து, மற்ற நாட்கள் காலை 5.30 – இரவு 7.30 வரை திறந்து இருக்கும். பெரியவர்களுக்கு ரூ.50, சிறியவர்களுக்கு ரூ.30 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




