விக்ரம் உடல்நிலை குறித்து மேலாளர் விளக்கம்..!
Vikram has been admitted to a hospital in Chennai. File photo
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விக்ரம் திடீரென உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு விட்டதாக செய்தி பரவியது.
இந்நிலையில் விக்ரமின் மேலாளர் சூரியநாராயணன் அவரின் உடல்நிலை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். லேசான நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் மாரடைப்பு ஏற்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற வதந்திகள் வேதனை அடைய செய்வதாக குறிப்பிட்டுள்ள அவர் இந்த நேரத்தில் விக்ரம் குடும்பத்தின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஆதாரமற்ற செய்திகளை பகிர வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.





