--- --:--:-- --

பட்டப்பகலில் கல்லூரி மாணவியை சுட்டுக் கொன்ற நபர் கைது..!

12

ரியானா மாநிலத்தில் பட்டப்பகலில் கல்லூரி மாணவியை சுட்டுக் கொன்ற நபரை சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் சில மணி நேரத்தில் கைது செய்தனர். வல்லாப் தெருவில் உள்ள கல்லூரியில் இறுதியாண்டு பி.காம் பயிலும் நிகிதா என்ற மாணவி தேர்வு எழுதிவிட்டு கல்லூரிக்கு வெளியே தோழியுடன் நேற்று நின்று கொண்டிருந்தார்.

 

அப்போது காரில் வந்த இரண்டு பேரில் ஒருவர் நிகிதாவை காருக்குள் இழுக்க முயற்சித்தனர். ஆனால் நிகிதா ஒத்துழைக்காததால் கைத்துப்பாக்கியால் சுட்டு விட்டு கூட்டாளிகளுடன் காரில் ஏறி தப்பி ஓடினார். இதில் பலத்த காயமடைந்த நிகிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் பலியானார்.

 

தப்பியோடிய 2 பேரில் தௌஃபிக் என்பவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் சில மாதங்களுக்கு முன்னர் நிகிதா பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்த நிலையில் தற்போது துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது தெரியவந்தது.

Leave a Reply

Right Menu Icon