சிறுமிக்கு ஆபாச படம் அனுப்பிய நபர் கைது..!
ஆன்லைன் வகுப்பிற்காக செல்போன் வைத்திருக்கும் சிறுமிகளிடம் நட்பாக பழகிய பிறகு அவர்களுக்கு ஆபாச படங்களை அனுப்பியதாக இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்திருக்கிறார்கள். ஆன்லைன் வகுப்புகள் நேரம் போக மற்ற நேரங்களில் சமூக வலைதளங்களை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.
ஆனால் அவர்களின் இந்த செயலால் பல நேரங்களில் ஆபத்தும் அதிகம் என்பதை உணர்த்தியுள்ளது மதுரையில் நடந்த இந்த சம்பவம். மதுரையைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவருக்கு இணையத்தில் அறிமுகமாகி இருக்கின்றனர் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் சேர்ந்த ஆறுமுகம் மற்றும் மஹாராஜா ஆகிய இரண்டு பேர்.
கல்லூரி முடித்துவிட்டு இருவரும் வேலை என்று சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. அந்த சிறுமியிடம் நட்பாக பழக ஆரம்பித்த இருவர்கள் ஒரு கட்டத்தில் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சிறுமிக்கு அனுப்பியுள்ளனர். அதேபோன்று ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அனுப்ப சொல்லி சிறுமியை மிரட்டியதாக கூறப்படுகிறது.
ஒருகட்டத்தில் சிறுமியை மிரட்டி பணிய வைக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டதோடு பணம் பறிக்கவும் முயற்சித்துள்ளனர். இதனால் அதிர்ந்து போன அந்த சிறுமி தன் பெற்றோரிடம் நடந்ததை கூறி போலீசில் புகார் அளித்துள்ளனர்.போலீசார் நடத்தி வருகின்றனர்.







