திருமண விழாவில் பாரம்பரிய நடனமாடிய மம்தா பானர்ஜி..!
மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நிகழ்ச்சி ஒன்றில் நடன கலைஞர்களுடன் கைகோர்த்தபடி பாரம்பரிய நடனம் ஆடியது காண்போரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. அலிப்பூரில் நடைபெற்ற திருமண விழாவில் நடன கலைஞர்கள் ஒன்று கூடி நடனமாடினார்.
அந்த விழாவிற்கு சென்ற முதலமைச்சர் மம்தா பானர்ஜி அனைவரும் எதிர்பாராத வகையில் திடீரென நடன கலைஞர்களுடன் இணைந்து நடனம் ஆடினார். இதனால் அங்கிருந்தவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.






