கள ஆய்வுக்கு செய்யாத மதுரை மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையாளர் வடிவில் சோளக்காட்டு பொம்மை செய்து நூதன முறையில் வார்டு கவுன்சிலர் எதிர்ப்பு..!
மதுரையில் மதுரை மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையாளர் வார்டு கள ஆய்வுக்கு வராத காரணத்தினால் பலமுறை முறையிட்டும் நடக்காதால் மதுரை மாநகராட்சி மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் அவர்களின் சோளக்காட்டு பொம்மை செய்து அதனை களப்பணி செய்தது போல வார்டு முழுவதும் சுற்றி வந்து அந்த பொம்மைக்கு முன்னாடி போர்த்தியது மற்றும் மனுக்களை கொடுத்தது மிகவும் வினோதமாக நடைபெற்றது.
இது பற்றி மதுரை மாநகராட்சி விளாங்குடி20 வார்டு கவுன்சிலர் நாகஜோதி சித்தன் தெரிவித்தாவது: மதுரை மாநகராட்சி விளாங்குடி 20வது வார்டை ஒதுக்கும் மதுரை மாநகராட்சி ஆணையாளர்,மதுரை மாநகராட்சி மேயர் அவர்கள் 15 மாதம் ஆகியும் நமது வார்டுக்கு ஆய்வு பணிகளுக்கு வரவில்லை.

இதனை கண்டித்து மதுரை மாநகராட்சி ஆணையாளர் -மேயர் வடிவில் உள்ள சோழகாட்டு பொம்மை ஆய்வு பணி செய்ய வைத்தேன். இன்று காலை 8.00மணிக்கு மக்கள் அனைவரும் பொம்மைக்கு பொண்ணாடை போற்றி நமது வார்டில் உள்ள குறைகளை மனு வழங்கி தெரிவித்தனர் என்று கூறி எதிர்ப்பை தெரிவித்தார்.






