மே 8 ஆம் தேதி மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்..!
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வரும் மே 8-ஆம் தேதி திருக்கல்யாணம் நடைபெறவுள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதனைக் காண ரூ. 200 மற்றும் ரூ. 500 என இரு வகையான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படவுள்ளன. hrce.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஏப்ரல் 29 முதல் மே 2-ஆம் தேதி வரை இவற்றை முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




