சின்னத்திரை நடிகை சித்ரா உடல் ஊர்வலம் முடிந்து தகனம்..!
சின்னத்திரை நடிகை சித்ரா உடல் சென்னையில் தகனம் செய்யப்பட்டுள்ளது. நேற்று தற்கொலை செய்து கொண்ட சின்னத்திரை நடிகை சித்ராவின் உடல் சரியாக 12 மணிக்கு கோட்டூர்புரத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் பொதுமக்கள் மற்றும் அவனுடைய உறவினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
அங்கிருந்து சரியாக 4 மணிக்கு ஊர்வலமாக பெசன்ட் நகர் மின் மயானத்துக்கு எடுத்து வரப்பட்டது. வழிநெடுகிலும் அவரது ரசிகர்கள் கண்ணீர் மல்க அவருக்கு பிரியாவிடை கொடுத்தனர். ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக ஊர்வலம் எடுத்து வரப்பட்ட அவரது உடலானது பெசன்ட் நகர் மின் மயானத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இறுதி சடங்குகள் இங்கே செய்யப்பட்டுள்ளன. அவரது உறவினர்கள் மற்றும் அந்த பகுதி மக்கள் அந்த பகுதிக்கு வருகை தந்துள்ளனர். இறுதி அஞ்சலி அவர்கள் செலுத்திய பின்னர் இறுதி சாங்கியங்கள் செய்யப்பட்ட பின் அவரது உடலானது தகனம் செய்யப்படும்.
அவரது இறப்பில் மர்மம் இருப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்து வந்த நிலையில் காவல்துறை சார்பில் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது உடற்கூறு பரிசோதனை முடிந்து முதல் கட்ட காவல்துறை அறிக்கையானது வந்துள்ளது.
அதில் அவர்கள் இறுதியாக தற்கொலை செய்து கொண்டிருப்பதாக தான் அறிக்கை வெளியாகியுள்ளது.






