தமிழ்நாட்டில் மின்சார தேவை அதிகரித்துள்ளதாக தகவல்..!
தமிழ்நாட்டில் மின்சார தேவை 9 சதவீதம் அதிகரித்துள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த வாரியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் மத்திய மின்சார ஆணையத்தின் கணக்கெடுப்பின்படி ஏப்ரல் மாதம் மின்தேவை 25.6 சதவீதமும், மே மாதத்தில் 14.5 சதவீதம் குறைந்ததாக கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தமிழகத்தில் மின்சார தேவை 8,266 மில்லியன் யூனிட்டாக இருந்தது என்றும், இந்த ஆண்டு அக்டோபர் மாதம், மின்சாரத்தை 9,086 மில்லியனாக அதிகரித்தது என்றும், இது 9 சதவீதம் அதிகம் என்றும் தெரிவித்துள்ளனர்.
கொரொனா கட்டுப்பாட்டிற்கு பிறகு முதன் முறையாக தமிழகத்தின் மின்தேவை அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.






