--- --:--:-- --

வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை விற்கும் நிலையில் பேஸ்புக்..?

6

மெரிக்காவில் தொடரப்பட்டுள்ள பல வழக்குகள் காரணமாக வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை விற்கும் நிலைக்கு பேஸ்புக் நிறுவனம் தள்ளப்படலாம் என கூறப்படுகிறது.

 

போட்டி நிறுவனங்களை ஒழிக்கும் திட்டத்துடன் அவற்றை வாங்குதல் அல்லது ஒழித்தல் போன்ற நடவடிக்கைகளில் ஃபேஸ்புக் ஈடுபடுவதாக அமெரிக்க தேசிய வர்த்தக ஆணையமும் பல மாநிலங்களும் வழக்கு தொடுத்துள்ளனர். இதுபோன்ற வழக்கு கூகுளின் தாய் நிறுவனமான அல்ஃபபெட் மீதும் இந்தாண்டு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

ஃபேஸ்புக் நிறுவனம் 2012 இல் 7 ஆயிரத்து 400 கோடி ரூபாய்க்கு இன்ஸ்டாகிராமையும், 2014இல் வாட்ஸ்அப் ஒரு லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விலைக்கு வாங்கியது.

Leave a Reply

Right Menu Icon