தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..!
வரும் 12ஆம் தேதி கும்பகோணம் மகாமக குளத்தில் மாசி மக தீர்த்தவாரி நடைபெறவுள்ளது. இந்த விழாவிற்கு தமிழகம் மட்டுமல்லாது நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் வந்து புனித நீராடுவது உண்டு.
இதனையொட்டி அன்றைய தினம் தஞ்சாவூர் மாவட்டம் முழுவதிற்கும் உள்ளூர் விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதனை ஈடு செய்ய வரும் 29ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.





