தொப்பி போட்டு வேடம் போடுபவன் நான் அல்ல..!
ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் விஜய் கலந்துகொண்டது பற்றிய கேள்விக்கு சீமான் பதிலளித்துள்ளார். ரமலான், பக்ரீத் பண்டிகைகளில் இஸ்லாத்தில் உள்ள எனது உறவுகள் என் வீட்டுக்கே நோன்பு கஞ்சியை அனுப்புவார்கள்.
ஒருநாள் தொப்பி போட்டு வேடம் போடுபவன் நான் அல்ல. அவர்களின் உரிமைக்காக நிற்பவன். தம்பி விஜய் செய்தது அவரது தனிப்பட்ட செயல். இதை விமர்சிக்க ஒன்றுமில்லை என சீமான் கூறினார்.





