தமிழ்நாட்டில் பணிபுரிய தமிழ் அவசியம்: ஐகோர்ட்
தேனியில் இளநிலைப் பொறியாளராக இருந்த ஜெயக்குமார், தமிழ்த் தேர்வில் தோல்வி அடைந்ததால் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதனை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கை மதுரை ஐகோர்ட் கிளை இன்று விசாரித்தது.
அப்போது, தமிழகத்தில் பணிபுரிய தமிழ் அவசியம் தெரிந்திருக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், தமிழ் தெரியாமல் எதற்காக ஒருவர் தமிழகத்தில் வேலை செய்ய வேண்டும் எனவும் அவர்கள் வினவினர்.





