கொஞ்சம் கொஞ்சமாக நீரில் மூழ்கிய சிறுவன்..!
சென்னை நீலாங்கரை குப்பம் கடற்கரையில் பதினொன்றாம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்தான். அவரை மீனவர் ஒருவர் காப்பாற்ற முயன்ற பொழுது மாணவர் பிழைக்கவில்லை.
நீலாங்கரை போலீசார் இறந்த மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த 16 வயது சிறுவன் நண்பர்கள் ஆறு பேருடன் கடலில் குளிக்க சென்று பலியானது விசாரணையில் தெரியவந்தது.





