ஹிட்லர் எழுதிய கடிதம் 40 ஆயிரம் டாலருக்கு ஏலம்..!
சர்வாதிகாரி ஹிட்லரின் பேச்சுகள், கைப்பட எழுதிய கடிதங்கள் 40 ஆயிரம் டாலருக்கு ஏலம் விடப்பட்டன. இரண்டாம் உலகப்போர் தொடங்குவதற்கு முன்னர் 1939 இல் பெர்லின் புதிய ராணுவ அதிகாரிகளிடம் ஹிட்லர் எழுதிக் காட்டிய 9 பக்க கையெழுத்து பிரதி 40 ஆயிரத்து 300 அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை ஆனது.
இந்த நிலையில் ஹிட்லரின் கடிதங்களை ஏலம் விடுவதற்கு பல்வேறு யூத அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கடிதங்களில் உள்ள சார் அம்சங்கள் வெளியானால் மீண்டும் நாசி அமைப்பு தலை தூக்க கூடும் என அந்த அமைப்பு கவலை தெரிவித்துள்ளனர்.







