--- --:--:-- --

காதலர் தினம் பட நடிகை மீது நில அபகரிப்பு புகார்!

13

காதலர் தினம் படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை ஈர்த்தவர் சோனாலி. அந்த படம் வந்து 27 ஆண்டுகள் ஆனாலும் தற்போதும் ரசிகர்கள் நினைவில் வைத்துக்கொண்டிருக்கும் நடிகையாகத்தான் அவர் இருக்கிறார்.குறிப்பாக அந்த படத்தில் வரும் பாடல்கள் தற்போதும் ரசிகர்கள் ரசித்து கேட்கும் ஒன்றாக இருந்து வருகிறது.

 

சில வருடங்களுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சோனாலி பிந்த்ரே அதிலிருந்து மீண்டு வந்திருக்கிறார். இந்நிலையில் புனேவை சேர்ந்த விவசாயி ஒருவர் நடிகை சோனாலி பிந்த்ரே மற்றும் அவரது கணவர் இருவர் மீதும் வழக்கு ஒன்றை தொடர்ந்திருக்கிறார். தங்களது நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமிக்க நடிகை அவரது கணவரும் முயற்சிப்பதாக அவர் புகார் தெரிவித்திருக்கிறார்.

 

 

இந்த வழக்கு விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. அடுத்த விசாரணை நீதிமன்றத்தில் ஏப்ரல் 24ஆம் தேதி நடக்க இருக்கிறது. இந்த செய்தி சோனாலி ரசிகர்களை கடும் அதிர்ச்சியாக்கி இருக்கிறது. இது பற்றி விளக்கம் கொடுத்து இருக்கும் சோனாலி பிந்த்ரே, தனது பெயர் அந்த நிலத்தை வாங்கிய டாக்குமெண்ட்டில் எங்குமே இல்லை. இப்படி ஒரு பொய் வழக்கை போட்டு பணம் பறிக்க திட்டம் போடுகிறார்கள் என சோனாலி பிந்த்ரே தற்போது குற்றம் சாட்டி இருக்கிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon