லலிதா ஜுவல்லரி கொள்ளை: 4ஆவது நாளாக திருவாரூரில் முகாமிட்டுள்ள தனிப்படை போலீஸ்
திருச்சி லலிதா ஜுவல்லரி இலங்கைத் கொலை தொடர்பாக 15 பேரிடம் தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவாரூர் திருமாறன் என்பவரை அழைத்து சென்று தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளைக் கும்பலை சேர்ந்த மணிகண்டனிடம் பல கட்ட விசாரணை நடத்திய காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
அதேபோல் கொள்ளையில் ஈடுபட்டதாக திருவாரூர் முருகனின் சகோதரியும் மற்றொரு சுரேஷின் தாயுமான கணவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களைத் தொடர்ந்து குணா, மாரியப்பன், ரவி பார்த்திபன் ஆகியோரிடம் திருச்சியில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதில் கிடைத்த தகவலின்படி தோப்பில் வசித்து வரும் திருவாரூர் முருகனின் சகோதரர் மகன் முரளி என்பதும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ள தகவலின்படி பிரதாப் என்பவரை காவல்துறையினர் பிடித்துள்ளனர்.
அதேபோல் திருவாரூர் பஜனை மடத்தை சேர்ந்த திருமாறன் என்பவரையும் காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்து சென்றனர். கடந்த ஒன்றாம் தேதி திருச்சி லலிதா ஜூவல்லரி யில் நடைபெற்ற கொலை தொடர்பாக 15 பேரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முருகன் கைது செய்யப்பட்டால் தான் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் எங்கே வைக்கப்பட்டுள்ளன என்ற விவரம் தெரியவரும் என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. தொடர்ந்து நான்காவது நாளாக காவல்துறையினர் திருவாரூரில் முகாமிட்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




