--- --:--:-- --

ஊரடங்கு உத்தரவைப் பற்றி போதிய விழிப்புணர்வு இல்லா ஊராட்சி

6

இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆர்.காவனூர் ஊராட்சியில் 144 தடை உத்தரவு ஊரடங்கு உத்தரவு, கொரோனா நோய், தொற்று நோய் குறித்த விழிப்புணர்வு போதிய அளவில் ஊராட்சி நிர்வாகம் செயல்படுத்தவில்லை என்ற நிலையே காணப்படுகின்றன.

 

ஊராட்சி நிர்வாகம் சார்பில் கிருமி நாசினி தெளிப்பு என்பது இல்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் ப்ளீச்சிங் பவுடர் பண்படுத்தவும் இல்லை என்றும் கூறுகின்றனர்.மேலும் மக்கள் கொரோனா வைரஸ் தொற்று நோய் பீதியில் இருந்து வரும் சூழ்நிலையில் இந்த ஊராட்சி மக்கள் மத்தியில் குடிநீர் பிடிக்கும் இடத்தில் போதிய இடைவெளி இல்லாமல் நின்று குடிநீர் சேகரிப்பது மனவேதனை அளிக்கிறது.

அதேபோல ஊராட்சி பகுதியில் கட்டிட பணிகள் கூட எப்போதும் போல நடைபெறுகிறது. மேலும் கடந்த ஆண்டு ஜீன் மாதத்தில் மாவட்ட ஆட்சியர் ரூ 2.50 லட்சம் மதிப்பிலான ஆழ் துளை கிணறு அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அப்போது ஆட்சியர் கூறியது தினமும் சராசரியாக 79.4 மில்லியன்லிட்டர் குடிநீர் தேவையென கணக்கிடப்பட்டுள்ளது. காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் நாளொன்றுக்கு சராசரியாக 35 மில்லியன் லிட்டர்,உள்ளாட்சித் துறை மூலம் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணறு, திறந்தவெளிக் கிணறு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோக நிலையம் போன்ற குடிநீர் ஆதாரங்கள் மூலம் சராசரியாக 38 மில்லியன் லிட்டர் அளவில், மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. என்று கூறி நேரடியாக ஆய்வும் மேற்கொண்டார். ஆனால் அதனை அரசு அதிகாரிகள் மற்றும் தற்போது பதவியேற்ற ஊராட்சி மன்ற தலைவரும் கண்டு கொள்ள வில்லை என்று கூறுகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon