மன்னர் சேதுபதிக்கு திடீர் மாரடைப்பால் மரணம்..!
ராமநாதபுரம் சமஸ்தானத்தின் இளைய மன்னர் குமரன் சேதுபதி மாரடைப்பு காரணமாக உயிர் இழந்தார். அவருக்கு வயது 56. ராமநாதபுரம் தேவஸ்தானம் சமஸ்தானத்தின் மன்னரும் , ராமேஸ்வரம் ராமநாதபுரம் ஆலய தலைவருமான அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவரது உடல் மருத்துவமனையிலிருந்து ராமநாதபுரம் அரண்மனை ராமலிங்க விலாசம் அரண்மனைக்கு கொண்டுவரப்பட்டது.
அங்கேயே அவரது உடல் பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் இளைஞர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், சசிகலா, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.






