கேசவ விநாயகம் மாற்றம்…?
பாஜக மாநில அமைப்பு பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து கேசவ விநாயகம் மாற்றப்பட்ட நிலையில், கன்னியாகுமரியைச் சேர்ந்த பிரஷோபக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். பாஜக விதிகளின்படி, கட்சியின் அமைப்பு பொதுச்செயலாளர் பதவி ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் நேரடியாக நியமிக்கப்படுகிறது. இந்த பதவி கட்சியின் கொள்கை மற்றும் நிர்வாக முடிவுகளில் பெரும் அதிகாரத்தை கொண்டது.
தமிழ்நாடு பாஜகவில் இந்த முக்கிய பதவியில், 2015ஆம் ஆண்டு முதல் 10 ஆண்டுகளுக்கு மேலாக கேசவ விநாயகம் செயலாற்றி வந்தார். இந்நிலையில், உட்கட்சி பிரச்னை காரணமாக கேசவ விநாயகம் மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
அவருக்கு பதிலாக கன்னியாகுமரியைச் சேர்ந்தவரும், வடதமிழக ஆர்.எஸ்.எஸ். அமைப்பாளருமான பிரஷோபக் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். மார்ச் மாதம் அவர் பொறுப்பை ஏற்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.





