காஞ்சிபுரம் மாவட்டத்தில் முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 100 சதவீதம் முழு முடக்கத்தை ஆட்சியர் பொன்னையா அறிவித்துள்ளார். பொது முடக்கத்தை மீறி வெளியே வருவோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
குன்றத்தூர், மாங்காடு, குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த 18 கிராம பகுதிகளில் முழு முடக்க உத்தரவை தீவிரமாக அமல்படுத்தப்பட்ட வருவதாகவும், இந்த பகுதிகளில் காய்கறி, மளிகை கடைகள் திறக்க அனுமதிக்க படாது என்றும் பொன்னையா கூறியுள்ளார்.
97 நடமாடும் வாகனங்கள் மூலம் ஒவ்வொரு வார்டுக்கும், காய்கறிகள், மளிகை பொருட்கள், வீடு வீடாக விற்பனை செய்யப்படுவதாகவும் ஆட்சியர் தெரிவித்தார். ஊரடங்கை மீறியதாக நேற்று ஒரே நாளில் 175 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் 1,522 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் ஆட்சியர் தெரிவித்தார்.







