அவினாசியில் கம்பன் கழக நிர்வாகிகள் பதவியேற்பு!
தமிழுக்கு மிகவும் சிறப்பு சேர்க்கும் நூல் கம்பராமாயணம். யாமறிந்த புலவரிலேயே கம்பனை போல், வள்ளுவரை போல், இளங்கோவை போல் புவிதனிலே யாங்கனுமே பிறந்ததில்லை என்று பாடிய பாரதி கம்பனை முதலில் வைத்து பாடுயுள்ளதால் கம்பனின் சிறப்பு புலப்படுகிறது.
புலவர் கம்பருக்கு சென்னை, காரைக்குடி, திருப்பூர் ஆகிய இடங்களில் கம்பன் கழகங்கள் ஏற்படுத்தப்பட்டு கம்பரின் சிறப்புகளையும் கம்பனின் கவிநயத்தையும் இவர் இயற்றிய ராம கதையினை பாமர மக்களும் அறியும் வண்ணம் எடுத்து சொல்வதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அவிநாசியிலும் ஒரு கம்பன் கழக ஏற்படுத்த வேண்டும் என்று அவினாசி நல்லோர்கள் ஒன்றாக இணைந்து முடிவு செய்தனர். இதனை தொடர்ந்து கம்பன் கழக கூட்டம் அவினாசியில் உள்ள கருணாம்பிகா அரிசி ஆலை வளாகத்தில் நடந்தது. கூட்டத்தில் அவிநாசி கம்பன் கழகத்தின் பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இதையடுத்து அவினாசி கம்பன் கழகத் தலைவராக ராஜ்குமார், செயல் தலைவராக பழனிச்சாமி, செயலாளராக மெய் ஞானமூர்த்தி, பொருளாளராக ராமகிருஷ்ணன், துணைத் தலைவராக சுப்ரமணியம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு பதவி ஏற்றனர். இதனை தொடர்ந்து சுப்பிரமணியம், நடராசன், வெங்கடாசலம், அப்பர்சாமி ஆகியோர் கம்பன் கழகத்தின் ஆலோசர்களாக நியமிக்கப்பட்டனர்.
பின்னர் கூட்டத்தில் கம்பருடைய கவி சிறப்பையும், கம்பராமாயணத்தில் கூறப்பட்டுள்ள வாழ்வியல் நெறிமுறைகளையும் பொதுமக்களுக்கு கொண்டு சேர்ப்பது. அதேபோல் பள்ளி கல்லூரி மாணவர்களிடையே கம்பனின் கவிநயத்தை சுவைக்கும் ஆர்வத்தை ஏற்படுத்துவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.





