மனோபாலா இருக்கும் இடத்திற்கே கமல் வரமாட்டார் – நடிகை சுஹாசினி
சினிமாவில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து மக்களை கவர்ந்தவர் தான் மனோபாலா. இவர் 90 களில் பல முன்னணி ஹீரோக்களை வைத்து பல படங்களை இயக்கியுள்ளார்.
சமீபத்தில் மனோபாலா உடல் நிலை குறைவால் உயிரிழந்தார். இவரின் மறைவு ரசிகர்களையும் திரை பிரபலங்களையும் அதிர்ச்சி அடையவைத்தது.இந்நிலையில் பிரபல நடிகை சுஹாசினி மனோபாலா பற்றி தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அவர், கமல் ஹாசன் மூலமாக தான் மனோபாலா சினிமாவில் அறிமுகமானார்.
இவர்கள் இருவரும் சிறிது காலம் பேசிக்கொள்ளவில்லை. மேலும் மனோபாலா இருக்கும் இடத்திற்கே கமல் ஹாசன் போக மாட்டார். ஒரு நாள் மனோபாலா வந்து, ” உன்னுடைய சித்தப்பா எல்லாரிடமும் பேசுகிறார்.ஆனால் சில என்னுடன் மட்டும் பேசமாட்டார் என்று அழுததாக நடிகை சுஹாசினி கூறியுள்ளார்.





