நீதித்துறையின் சோம்பல் – திருப்பரங்குன்றம் தீர்ப்பு குறித்து ஆ.ராசா விமர்சனம்
திருப்பரங்குன்றம் கோவிலில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்துத் தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா விமர்சனம் செய்துள்ளார். தி.மு.க எம்.பி. ஆ.ராசா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “நீதியின் நோக்கத்தை நிறைவு செய்வதற்கு ஒரு தீர்ப்பு இரண்டு முக்கியக் காரணிகளின் அடிப்படையில் அமைய வேண்டும். உண்மைகளை மதிப்பீடு செய்தல் மற்றும் சட்டத்தை விளக்குதல்.
இதில் ஒன்று தவறினாலும் அது அபத்தமாகிவிடும்! இரண்டுமே தவறினால் அது தர்மசங்கடமாகிவிடும். நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணய்யர் கூறுகையில், “நிர்வாகத் திறமையின்மையுடன், நீதித்துறையின் சோம்பேறித்தனமான அகந்தையும் மற்றும் கள யதார்த்தங்களைப் பற்றிய போதிய புரிதல் இல்லாத நிலையும் கைகோர்த்தால், அதன் விளைவு எப்படி இருக்கும்?” என்கிறார்.” என்று பதிவிட்டுள்ளார்.






