ராகுல் தகுதி நீக்கம் தண்டனைக்கு இடைக்கால தடை கோரிய வழக்கில் இன்று தீர்ப்பு..!
அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டு சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்க கோரி ராகுல் காந்தி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2019 ஆம் ஆண்டு தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசிய ராகுல், மோடி என்ற பெயர் குறித்து சிலர் கருத்துக்களை தெரிவித்து இருந்தார். அதை கண்டித்து குஜராத் பாஜக எம்எல்ஏ, சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கை தாக்கல் செய்தார்.
அதில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதனால் அவர் எம்பி பதவியை இழந்தார். ராகுலுக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டு சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்க கோரி சூரத் கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மனு தாக்கல் செய்தார்.
அதன் மீது இந்த தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை ராகுலுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது ரத்தாகும்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





