--- --:--:-- --

நாளை திறக்கப்படுகிறது ஜெயலலிதாவின் வேதா இல்லம்..!

1

நாளை வேதா இல்லம் திறக்கப்பட இருக்கும் நிலையில் வேதா நிலையத்தை அரசுடைமையாக்கி ஏற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து தீபக் தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

 

போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையத்தை அரசுடமையாக்க பிறப்பிக்கப்பட்ட சட்டத்தை செல்லாது என அறிவிக்கக்கோரி ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

 

அதில் ஜெயலலிதா மறைவிற்கு பின் தங்களை வாரிசுகளாக அறிவித்திருக்கும் நிலையில் வேதா நிலையத்தை அரசுடமையாக்க சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறினார் .தனிநபர் சொத்துக்களை கையகப்படுத்துவது தொடர்பாக சட்டமியற்றும் அதிகாரம் இல்லை எனவும் அதனால் சட்டத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் மனுவில் கூறியிருந்தார்.

 

இந்த மனு நிலுவையில் உள்ள நிலையில் அந்த வேதா இல்லம் நாளை திறக்கப்பட உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் காரணமாக இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க கோரி தீபக் தரப்பில் முறையிடப்பட்டது. இதனை ஏற்க மறுத்தநீதிபதிகள் வழக்கமான முறையில் அடுத்த திங்கள்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.

Leave a Reply

Right Menu Icon