--- --:--:-- --

ஜெயலலிதா அப்போலோ மருத்துவர் பரபரப்பு வாக்குமூலம்..!

4

ஜெயலலிதா இரண்டாவது முறையாக முதலமைச்சராக பதவி ஏற்கும் முந்தைய நாளே உடல்நலக்குறைவு ஏற்பட்டு இருப்பதாகவும் ஓய்வெடுக்க அறிவுறுத்தியும் அவர் மறுத்து விட்டார் எனவும் ஆறுமுகசாமி ஆணையத்தில் உள்ள மருத்துவர் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.

 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் ஆறுமுகசாமி ஆணையம் இன்று விசாரணையை தொடங்கியது.

 

சென்னை எழிலகத்தில் உள்ள விசாரணை ஆணையமும் அங்குள்ள மருத்துவர்கள் பாபு மனோகர், அருள்செல்வன், ராமகிருஷ்ணன், சுந்தரேஷ் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

 

அப்பொழுது 2016ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக ஜெயலலிதா முதலமைச்சராக பதவி ஏற்கும் நாளுக்கு முன்பு உடல் நலக்குறைவு இருந்தது என்றும் தலைசுற்றல், மயக்கம் இருந்ததால் துணையின்றி நடப்பதற்கு ஜெயலலிதா சிரமப்பட்டார் என்றும், ஓய்வெடுக்குமாறு ஜெயலலிதாவிடம் பரிந்துரைத்த போது 16 மணிநேரம் வேலை இருப்பதால் ஓய்வு எடுக்க இயலாது என்று கூறி மறுத்துவிட்டதாகவும் ஆறுமுகசாமி ஆணையத்தின் மருத்துவர் மனோகரன் தகவல் தெரிவித்துள்ளார்.

 

Right Menu Icon