ஓடிடியில் உலக அளவில் சாதனை படைத்த ஜெயிலர்!
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர்ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் படம் 600 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து பாக்ஸ் ஆபிசில் மிகப்பெரிய சாதனை படைத்தது. இதன் மூலமாக ரஜினியின் கெரியர் மீண்டும் உச்சத்திற்கு சென்று இருக்கிறது.
தியேட்டரில் வெளியாகி நான்கு வாரங்களுக்கு பிறகு ஓடிடியில் ஜெயிலர் படம் வெளியானது. கடந்த செப்டம்பர் 7ம் தேதி ஓடிடி-யில் வெளிவந்த ஜெயிலர் படத்தை பல லட்சம் ரசிகர்கள் பார்த்து இருக்கின்றனர்.
ஓடிடியில் உலக அளவில் அதிகம் பார்க்கப்பட்ட படங்களின் டாப் 5 லிஸ்டில் ஜெயிலர் படம் இடம் பிடித்து இருக்கிறது. சன்நெக்ஸ்ட் தளத்தில் ஜெயிலர் படத்தை ரஜினி ரசிகர்கள் பார்த்து கொண்டாடி வருகின்றனர். படத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




