--- --:--:-- --

கொரொனாவால் மோசமடைந்து வரும் இத்தாலி!ஒரே நாளில் 600 பேர் பலி!

5

கொரொனா வைரஸ் தாக்குதலால் நேற்று ஒரே நாளில் மட்டும் இத்தாலியில் 600 பேர், ஸ்பெயினில் 540 பேர் பலியாகி இருப்பது உலக நாடுகளை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரொனா என்கிற கொடிய வைரஸ் தற்போது இத்தாலியை மையமாகக் கொண்டு சுழன்று வருகிறது.

 

வைரஸின் பிறப்பிடமான சீனாவில் கடந்த சில தினங்களாக உயிரிழப்போ, புதியதாக பாதிக்கப்பட்டவர்கள் இல்லாத நிலையில், இத்தாலியில் ஏற்கனவே 4,700 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த நிலையில், நேற்று ஒரே நாளில் மட்டும் 600 பேர் பலியாகியுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக ஸ்பெயின் நாட்டில் ஏற்கனவே 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மரணித்து இருந்த நிலையில், நேற்று மட்டும் 540 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

இந்த இரு நாடுகளில் பிரான்சில் முன்னதாக 3,800 பேருக்கும் அதிகமாக உயிரிழந்த நிலையில் நேற்று186 பேரும் பலியாகியுள்ளனர். இவர்களில் மூன்று பேர் மருத்துவர்கள் என அந்நாட்டு தேசிய சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதேபோல ஈரானில் ஒரே நாளில் 127 பேருக கொரொனாவுக்கு பலியாகி இருப்பது உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

 

தொடரும் தொற்று பரவலால் தென்னாபிரிக்காவில் மூன்று வாரங்களுக்கு நாடு தழுவிய அவசர நிலையை அந்நாடு பிறப்பித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon