--- --:--:-- --

எனது தந்தையே என்னை பாலியல் வன்கொடுமை செய்தார் : குஷ்பூ

6

90களில் தமிழ் சினிமாவின் அபிமான நடிகையாக இருந்தவர் குஷ்பு. பின்னர் அரசியலிலும் தடம்பதித்தார். திமுக காங்கிரஸ் என முக்கிய கட்சிகளின் அங்கம் வகித்து தற்பொழுது பாஜகவில் உள்ள குஷ்பூ அண்மையில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக பொறுப்பேற்றுள்ளார்.

 

இந்த நிலையில் தனது தந்தை தன்னை எட்டு வயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக அதிர்ச்சி சம்பவத்தை பகிர்ந்துள்ளார் குஷ்பூ. சிறுவயதில் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டால் வாழ்க்கை முழுவதும் அந்த சம்பவம் சம்பந்தப்பட்ட நபருக்கு அச்சமூட்டு வகையில் அமையும் எனக் கூறியுள்ள குஷ்பூ இந்த விவகாரம் தொடர்பாக எதிர்த்து பேச தனக்கு 15 வயதில் தான் தைரியம் வந்தது என குறிப்பிட்டுள்ளார்.

 

அப்பாவை மிகவும் நம்பியதால் இது குறித்து முன்னதாகவே பேச முடியவில்லை எனக் கூறிய குஷ்பூ தனக்கு 16 வயதாகும் பொழுது அவரின் தந்தை குடும்பத்தை இக்கட்டான சூழலில் விட்டுவிட்டு வெளியேறியதாக தெரிவித்துள்ளார்.

 

பிரபல நடிகையும் அரசியல்வாதியும் ஆன குஷ்பூ தனது தந்தையாலே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

 

Right Menu Icon