--- --:--:-- --

கொரோனா தாக்கத்திலிருந்து மீள 13 ஆண்டுகள் ஆகும்- ஆர்.பி.ஐ

2

கொரொனா தொற்றினால் ஏற்பட்ட பொருளாதார தாக்கத்திலிருந்து இந்தியா மீள்வதற்கு 13 ஆண்டுகள் வரை ஆகலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது. இந்திய கரன்சி மற்றும் நிதி தொடர்பான ரிசர்வ் வங்கியின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

 

கடந்த 2021ஆம் ஆண்டில் மைனஸ் 6.6 சதவீதம் என்று பொருளாதார வளர்ச்சி பின்னடைவை சந்தித்தது அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. 2023 ஆம் ஆண்டுக்குப் பிறகு பொருளாதாரம் வருடத்திற்கு 7.5% வளர்ச்சியடையும் என்று கருத்தில் கொண்டால் கொரொனா காலத்தில் சந்தித்த இழப்புகளை 2034, 2035ஆம் ஆண்டில் தான் சரி செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சி அரசின் அரசின் நடவடிக்கைகளை சார்ந்து இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

 

Right Menu Icon