--- --:--:-- --

வயிற்றில் ஏறி இறங்கிய தேர் சக்கரம்..!

3

நாகை அருகே தேர் சக்கரத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் திருமருகல் திருச்செங்காட்டங்குடி உத்திராபசுபதீஸ்வரர் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது.

 

தெற்கு வீதி எனுமிடத்தில் தேர் திரும்பும்பொழுது சக்கரத்தில் முட்டுக்கட்டை கொடுக்கும் பணியில் இருந்த தேவராஜன் தேர் சக்கரத்தில் சிக்கினார். படுகாயமடைந்த அவரை மீட்டு நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர்.

 

ஆனால் தேரின் சக்கரம் தேவராஜன் வயிற்றில் ஏறி இறங்கி அவரது வயிற்றுப்பகுதி சிதைந்து போனது. தஞ்சாவூர் மாவட்டத்தில் தேர் விபத்தில் 11 பேர் உயிரிழந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் நாகை மாவட்டத்தில் வழிபாட்டுத் தலங்களில் தேர் சக்கரங்களை இழுக்க முறையான அனுமதி பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டு இருந்தது.

 

அதனைத் தொடர்ந்து ஆலய நிர்வாகிகள் திருமருகல் ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் திருக்கண்ணபுரம் காவல்நிலையத்தில் முறையான அனுமதி பெற்றுள்ளனர். உயிரிழந்த தீபராஜின் குடும்பத்தினர் தேர்த்திருவிழாவின் போது காலம் காலமாக இந்த பணியில் ஈடுபடுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Right Menu Icon