திமுக பிரமுகர் வீட்டில் ஐ.டி ரெய்டு – வீட்டின் முன் குவிந்த திமுகவினருக்கு உணவு விநியோகம்
கோவையில் வருமான வரித்துறையினர் சோதனை நடைபெறும் இடத்தில் குவிந்த திமுகவினருக்கு பிஸ்கட், குடிநீர் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டன.
மின்துறை அமைச்சர் பாலாஜிக்கு நெருக்கமானவராக கருதப்படும் திமுக பிரமுகர் செந்தில் கார்த்திகேயனின் வீட்டில் காலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது. இதையடுத்து அவரது கட்சியினர் அவரது வீட்டில் முன் குவிந்து வருமானவரித்துறை சோதனைக்கு எதிராக முழக்கமிட்டனர்.
அவர்களுக்கு தண்ணீர் பாட்டில், பிஸ்கட் வசதி செய்யப்பட்டிருந்தன. கோவையில் அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்ற பொழுது அந்த கட்சியினருக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





