தமிழகத்தில் ஐந்து நாட்கள் மழை பெய்யக்கூடும்..!
தமிழகத்தில் ஐந்து நாட்கள் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்றும் நாளையும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் ஏனைய மாவட்டங்கள் புதுவை, காரைக்கால், பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 28ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரையில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் சேலம், தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடியலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






