முன்னாள் கணவருக்கு தேநீர் கொடுத்து உபசரிக்க வேண்டும் என்பது தவறு..!
குழந்தையை காண விரும்பும் முன்னாள் கணவருக்கு தேநீர் கொடுத்து உபசரிக்க வேண்டும் என்கிற தனி நீதிபதியின் உத்தரவை நீக்கம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கணவன் மனைவி ம விவாகரத்து பெற்ற நிலையில் மனைவியின் பராமரிப்பில் இருக்கும் குழந்தையை சந்திக்க கோரி கணவன் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பிரிந்து வாழும் மனைவி கணவனாக கருதாமல் விருந்தினர்களாக கருதி குழந்தையுடன் சேர்ந்து உணவருந்த வேண்டும் எனவும் குழந்தையை காண விரும்பும் முன்னாள் கணவனுக்கு தேனீர் வழங்கி உபசரிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து முன்னாள் மனைவி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. குழந்தையை காண வரும் முன்னாள் கணவரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என தனி நீதிபதி உத்தரவிட முடியாது என மனைவி தரப்பில் வாதிடப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் குழந்தையை காண வரும் முன்னாள் கணவருக்கு டீ கொடுத்து உபசரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு குற்றங்களை தனது அதிகார வரம்பை மீறி தனி நீதிபதி பிறப்பிக்க உள்ளதாக கூறி அந்த உத்தரவை நீக்கம் செய்து உத்தரவிட்டது.






