ஆவின் பாலில் புழுக்கள் இருந்ததாக வெளியான தகவல்..!
சேலம் மாவட்டத்தில் ஆவின் பாலில் புழுக்கள் இருந்தாக வெளியான செய்தி தவறானது என்று தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் வ உ சி சந்தையில் பின்புறம் உள்ள முகமது புரா தெருவில் வசிக்கும் இருவர் ஆவின் பால் பாக்கெட்டில் புழு இருப்பதாக தெரிவித்தனர். மறுப்பு தெரிவித்த பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் விளக்கம் அளித்துள்ளது.
இதைத்தொடர்ந்து கடையில் வாங்கப்பட்ட ஆவின் பாலை சம்பந்தப்பட்ட நபர்கள் முன்னிலையில் பரிசோதனை செய்து அதில் புழுக்கள் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.






