--- --:--:-- --

இஸ்ரோ விஞ்ஞானி தபன் மிஸ்ரா உணவில் நஞ்சு கலந்து தரப்பட்டதாக அதிர்ச்சி தகவல்..!

7

ஸ்ரோ விஞ்ஞானி தபன் மிஸ்ரா மூன்றாண்டுகளுக்கு முன் தனக்கு உணவில் நஞ்சு கலந்து தரப்பட்டதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். 2017 ஆம் ஆண்டு மே 23-ஆம் நாள் பெங்களூரில் உள்ள இஸ்ரோ தலைமையகத்தில் பதவி உயர்வுக்கான நேர்காணலில் தான் பங்கேற்றதாக தபன் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

 

அப்போது தனக்கு சிற்றுண்டியாக வழங்கப்பட்ட தோசைக்கு ஊற்றிய சட்னியில் ஆர்சனிக் டைஆக்சைட் எனப்படும் மெல்லக்கொல்லும் நஞ்சு கலக்கப்பட்டு இருந்ததாக தெரிவித்தார். 2017 ஜூலையில் தன்னை சந்தித்த உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு அதிகாரிகள் இதை தன்னிடம் கூறி மருத்துவர்களை அணுக சொன்னதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

தனது முகநூல் பக்கத்தில் நெடுநாளாக காத்த ரகசியம் என்ற பெயரில் தபன் மிஸ்ரா வெளியிட்டுள்ள பதிவில் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon