தலைகீழாக சரிந்தது தங்கம் விலை..!
ஜூலை மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. தொடர்ச்சியாக ஆகஸ்ட் மாத முதல் நாளிலேயே தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. தொடர்ந்து நேற்று தங்கம் விலை கணிசமாக உயர்ந்தது. நேற்றைய நிலவரப்படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,250க்கும், சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,06,000க்கும் விற்பனை செய்யப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன் படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.13,200க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,05,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.11,015க்கும் சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.88,120க்கும் விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளி விலையும் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.235க்கும், ஒரு கிலோ ரூ.2,35,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.





