--- --:--:-- --

தங்கம் விலை உயர்ந்ததா – குறைந்ததா?

1

புத்தாண்டின் முதல் நாள் மட்டும் தங்கம் விலை குறைந்த நிலையில் அடுத்து தொடர்ச்சியாக தங்கம் விலை உயர்ந்து நகை பிரியர்களின் வாயை பிளக்க வைத்தது.தொடர்ந்து 4 நாட்களுக்கும் மேலாக உயர்ந்து வந்த தங்கம் விலை நேற்று திடீரென சரிந்தது.

 

அதன் படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.12,750க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் 1,02,000க்கும் விற்பனை செய்யப்பட்டது.தொடர்ந்து இன்று தங்கம் விலை மீண்டும் எகிறியுள்ளது. 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,800க்கும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் 1,02,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

அதே போல 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,680க்கும் சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.85,440க்கும் விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளி விலை மட்டும் கிராமுக்கு ரூ.4 குறைந்து ஒரு கிராம் ரூ.268க்கும், ஒரு கிலோ ரூ.2,68,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Right Menu Icon