--- --:--:-- --

பிரதமர் மோடியுடன் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திப்பு

4

அமெரிக்காவிற்கும், ஈரானுக்கும் இடையே மோதல் நிலவும் நிலையில் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவத் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். ஈரான் உளவுப்பிரிவு தலைவரை கொன்றது, அமெரிக்க படைத்தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது என ஈரான் மற்றும் அமெரிக்காவில் இடையில் அண்மையில் மோதல் ஏற்பட்டது.

 

இந்நிலையில் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவத் அரசு முறை பயணமாக இந்தியாவிற்கு வந்துள்ள அவர் டெல்லியில் பிரதமரை சந்தித்து பேசினார். முன்னதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உடன் ஜாவத் பேச்சு நடத்தினார். இதையடுத்து கருத்தரங்கு ஒன்றில் பேசிய அவர் வளைகுடா பகுதியில் நிலவும் பதற்றத்தை தணிப்பதில் இந்தியா முக்கிய பங்காற்ற முடியும் என கூறியிருந்தார்.

Leave a Reply

Right Menu Icon