ஈ.சி.ஆர் 4 வழிச்சாலை மேம்பால டெண்டருக்கு இடைக்கால தடை..!
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அமைய உள்ள 4 வழிச்சாலை மேம்பாலத்திற்கான டெண்டருக்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போபாலைச் சேர்ந்த நிறுவனம் தொடர்ந்த வழக்கில், அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வரும் 27-ஆம் தேதி வரை டெண்டர் நடவடிக்கைகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.





