பேக்கிங் செய்யாமல் விற்கப்படும் சமையல் எண்ணெய்க்கு இடைக்கால தடை..!
சமையல் எண்ணெய்களை சில்லறையாக விற்க இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
உணவு பாதுகாப்பு சட்ட விதிகளை மீறி கலப்பட எண்ணெய் விற்பனையை தடுக்கவும் தரமான சமையல் எண்ணெய் விற்பதை உறுதி செய்யவும் கோரி தாக்கலான மனுவை விசாரித்த நீதிபதி கிருபாகரன் புகழேந்தி அமர்வு சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய்களை பேக்கிங் செய்யாமல் சில்லறை விற்பனை செய்ய இடைக்கால தடை விதித்தது.
பேக்கிங் செய்யாமல் சமையல் எண்ணை எவ்வாறு விற்கப் படுகிறது என்றும் எண்ணெயின் தரத்தை ஆய்வு செய்ய எத்தனை ஆய்வகங்கள் உள்ளன என்றும் வினவிய நீதிபதிகள் அது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 18-ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.






