--- --:--:-- --

சசிகலாவுக்கு சொந்தமான சொத்துகள் முடக்கம் என தகவல்

7

சசிகலாவுக்கு சொந்தமானதாக கருதப்படும் ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக வருமானவரித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பினாமி பரிவர்த்தனை தடைச்சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இந்த சொத்துக்கள் 2016 ஆம் ஆண்டு நவம்பர் எட்டாம் தேதி அறிவிக்கப்பட்ட பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு வாங்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

 

2017 ஆம் ஆண்டு ஆபரேஷன் கிளீன் மணி என்ற பெயரில் நடத்தப்பட்ட வருமானவரித்துறை சோதனையின் போது இந்த முறைகேடு கண்டறியப்பட்டது தெரியவந்துள்ளது. சசிகலா மற்றும் அவரின் குடும்பத்தினர் தொடர்புடைய 187 இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் பினாமி சொத்துகள் தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

 

இந்நிலையில் சென்னை, கோவை மற்றும் புதுச்சேரியில் சசிகலாவுக்கு சொந்தமானது என கூறப்படும் 9 சொத்துக்கள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை அதிகாரிகளுக்கும் தகவல் அனுப்பப்பட்டு இருப்பதாகவும் சொத்துக்கள் முடக்கப்பட்டது பற்றி மேல்முறையீடு செய்ய சசிகலாவிற்கு 90 நாட்கள் அவகாசம் இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

Leave a Reply

Right Menu Icon