கோவையில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. வெளியான முக்கிய தகவல்..!
கோவையில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பாஜக சார்பில் பிரதமர் மோடி கோவையில் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில் ராமநாதபுரத்தில் உள்ள தனியார் பெண்கள் பள்ளியில் குண்டு வெடிக்க உள்ளதாக மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மேற்கொண்ட சோதனையில் அது போலியான அழைப்பு என தெரிய வந்தது. தொலைபேசி எண்ணை வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






