--- --:--:-- --

பாகிஸ்தான் அத்துமீறல்களுக்கு இந்தியா பதிலடி..!

4

பொதுமக்கள் மீதான தாக்குதலை ஏற்க முடியாது என்று இந்திய ராணுவம் எச்சரித்துள்ளது. இந்திய இறையாண்மையை சீர்குலைக்க பாகிஸ்தான் முயற்சிப்பதாகவும் ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.வெள்ளிக்கிழமை இரவு பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்து வருவதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

 

பாகிஸ்தான் தொடர்ந்து இந்தியாவின் பல இடங்களை, குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் மற்றும் பஞ்சாப்பை குறிவைத்து தாக்கி வருகிறது. எல்லையில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதல் மற்றும் இந்தியாவின் பதிலடி குறித்து மத்திய அரசு காலை 10.30 மணிக்கு விரிவான செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளிக்க உள்ளது.

 

சனிக்கிழமை அதிகாலை, தங்களது விமானப்படை தளங்களை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டி உள்ளது. ராவல்பிண்டியில் உள்ள நூர் கான் விமானப்படைத்தளம், பஞ்சாப் சார்கோர்ட்டில் உள்ள ரபீக் விமானப்படைத்தளம், இல்லாமாபாத்தின் முடீர் பகுதியில் உள்ள விமானப்படைத்தளத்தை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

 

பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து அழித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷரீப் சௌத்ரி ராய்ட்டர்ஸ் செய்திக்கு அளித்த தொலைக்காட்சி அறிக்கையில் தெரிவித்தார். இந்திய ராணுவம் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிக்கையில், “பாகிஸ்தானின் வெளிப்படையான அத்துமீறல் ட்ரோன் தாக்குதல்கள் மற்றும் பிற வெடிமருந்துகளுடன் மேற்கு எல்லைகளில் தாக்குதல் தொடர்கிறது.

 

இதுபோன்ற ஒரு சம்பவத்தில், இன்று காலை 5 மணியளவில், அம்ரித்சரில் உள்ள கண்டோன்மென்ட் மீது ஆயுதம் ஏந்திய ட்ரோன்கள் பறப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக பதிலளித்த வான் பாதுகாப்புப் பிரிவுகள் ட்ரோன்களை அழித்தன” என்று இந்திய ராணுவம் கூறியுள்ளது.

Right Menu Icon