சுதந்திர தின விழா: டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு
சுதந்திர தின விழா டெல்லி செங்கோட்டையில் நாளை காலை 7.30 மணிக்கு தொடங்கும். பிரதமர் மோடி காலையில் அங்கு வரும்போது நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், இணை அமைச்சர் சஞ்சய்சேட் மற்றும் பாதுகாப்புத்துறை செயலாளர் ஆகியோர் வரவேற்கிறார்கள்.
இந்த விழாவை முன்னிட்டு செங்கோட்டையின் முழு கட்டுப்பாடும் நேற்று காவல்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. நேற்று இங்கு பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இங்கு மட்டுமல்ல, இந்தியா கேட் போன்ற சில இடங்களிலும் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.





