--- --:--:-- --

துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் இன்று பொறுப்பேற்பு..!

1

துணை முதல்வராக பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்ட உதயநிதி ஸ்டாலின் இன்று பொறுப்பேற்க உள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்முறையாக துணை முதல்வராக தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்புவகித்தார். அதன்பிறகு அதிமுக ஆட்சி காலத்தில் ஓ.பன்னீர்செல்வம் அந்தப் பொறுப்பை வகித்தார்.

 

இவர்களைத் தொடர்ந்து தற்போது மூன்றாவது நபராக உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பதவி ஏற்றுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெற்றது.

 

இந்த விழாவில் துணை முதல்வராக உதயநிதி பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார்.தற்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வசம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை, வறுமை ஓழிப்புத் திட்டங்கள் மற்றும் ஊரகக் கடன்கள் ஆகிய துறைகள் இருக்கும் நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் வசம் இருந்த திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத்துறையும் உதயநிதிக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

 

உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டதன் மூலம், அமைச்சரவையில் 10-ஆவது இடத்தில் உள்ள உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சருக்கு அடுத்தபடியாக, 2-ஆவது இடத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளார். புதிய பொறுப்புகளால், கட்சியில் மட்டுமல்லாது, ஆட்சி நிர்வாகத்திலும் அடுத்த கட்டத்திற்கு உதயநிதி ஸ்டாலின் நகர்ந்துள்ளார்.

Right Menu Icon