ராஜஸ்தானில் ராட்டினத்தின் கேபிள் அறுந்து விழுந்து விபத்து..!
ராஜஸ்தானில் பொருட்காட்சியில் நிறுவப்பட்டிருந்த ராட்டினத்தின் கேபிள் ஒயர் அறுந்து விழுந்த விபத்தில் 17 பேர் படுகாயம் அடைந்தனர். அஜ்மீர் நகரில் உள்ள கும்பம் நகர் என்ற பகுதியில் நடைபெற்று வரும் பொருட்காட்சியின் ஒரு பகுதியாக ராட்டினம் ஒன்று நிறுவப்பட்டிருந்தது.
இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலர் ஏரி சவாரி செய்துள்ளனர். அப்பொழுது ராட்டினத்தின் கேபிள் ஒயர் திடீரென அறுந்துள்ளது. இந்த விபத்தில் ராட்டினத்தில் இருந்த 17 பேர் படுகாயம் அடைந்தனர்.
அவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். விபத்து குறித்து விசாரித்து வருவதாக ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





